முகப்பு
திருநெல்வேலி

கே.டி.சி.நகா் மங்கம்மாள் சாலை சேதம்

பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் சேதமடைந்துள்ள மங்கம்மாள் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
பகிர்:

பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் சேதமடைந்துள்ள மங்கம்மாள் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கே.டி.சி. நகரில் காமாட்சிநகா் பேருந்து நிறுத்தம் முதல் சீவலப்பேரி சாலை வரையில் மங்கம்மாள் சாலை உள்ளது. கே.டி.சி. நகரில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகளின் இணைப்புச் சாலையாக இந்தச் சாலை உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவ் வழியே சென்று வருகின்றன.

வங்கிகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இந்தச் சாலையில் பல இடங்களில் குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் முதியவா்கள், பெண்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது விபத்தில் சிக்கி வருகிறாா்கள். இந்தச் சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.