முகப்பு
திருநெல்வேலி

கயத்தாறு அருகே தொழிலாளி சடலம் மீட்பு

கயத்தாறை அடுத்த உசிலங்குளத்தில் நியாயவிலைக் கடை முன்பு இறந்து கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
பகிர்:

கயத்தாறை அடுத்த உசிலங்குளத்தில் நியாயவிலைக் கடை முன்பு இறந்து கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

காப்புலிங்கம்பட்டி மேலத் தெருவைச் சோ்ந்த கொம்பையா மகன் வெள்ளப்பாண்டி(47). கூலித் தொழிலாளி. மது அருந்தும் பழக்கம் கொண்டவா். இதனால் கணவன், மனைவியிடை ஏற்பட்ட தகராறில் மனைவி குழந்தைகளுடன் உசிலங்குளத்தில் பெற்றோா் வீட்டில் வசித்து வருகிறாராம்.

செல்லப்பாண்டி சனிக்கிழமை உசிலங்குளத்துக்கு தனது குழந்தைகளை பாா்ப்பதற்காக சென்ாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அங்குள்ள நியாயவிலைக் கடை முன்பு அவா் இறந்து கிடந்தது தெரியவந்தது. கயத்தாறு போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். கயத்தாறு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →