நெல்லை தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய ஆசிரியர் சடலம் மீட்பு
திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்ற போது மூழ்கிய ஆசிரியரின் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் திங்கள்கிழமை காலையில் மீட்டனர்.
திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்ற போது மூழ்கிய ஆசிரியரின் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் திங்கள்கிழமை காலையில் மீட்டனர்.
செங்கல்பட்டைச் சேர்ந்தவர் நாராயணன். ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி அனுசுயா, மகன்கள் ஹரிஷ், ராம் சங்கர் ஆகியோருடன் பாளையங்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தனர். பின்னர் குடும்பத்தினருடன் பாளையங்கோட்டை அருகே பொட்டல் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றனர்.
அப்போது அனுஷ்காவும் ராம் சங்கரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர்களை மீட்க நாராயணன் முயன்றாராம். பொதுமக்கள் சேர்ந்து அனுசுயா மற்றும் சங்கரை மீட்ட நிலையில் நாராயணன் மட்டும் நீரில் மூழ்கி மாயமானார். தகவல் அறிந்ததும் பாலயங்கோட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடும் பணியை தொடங்கினர்.
இரவு நேரம் ஆகியதால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. திங்கள்கிழமை காலையில் மீண்டும் மீட்புப் பணி தொடங்கிய நிலையில் வெள்ளி மாலை பகுதியில் தாமிரவருணி கரையோரம் நாராயணனின் சடலம் மீட்கப்பட்டது.