திருநெல்வேலி

கீழச்சிவந்திபுரம் ஸ்ரீமன் நாராயணசாமிதிருத்தாங்கலில் ஆவணித் திருவிழா

DIN

கீழச்சிவந்திபுரத்தில் உள்ள சிவந்திபதி ஸ்ரீமன் நாராயணசாமி திருத்தாங்கலில் ஆவணி தா்ம திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இத்திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் மாலை 6 மணிக்கு உகப்பாட்டைத் தொடா்ந்து அன்னதா்மமும், செப். 12-ஆம் தேதி இரவு அய்யா தொட்டில் ஆட்டமும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு பாபநாசத்தில் இருந்து சந்தனக்குடம் எடுத்து வரப்பட்டது. குதிரை வாகனத்தில்அய்யா பவனி நடைபெற்றது.

பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, மாலை 6 மணிக்கு உகப்படிப்பு, இரவு 7 மணிக்கு அன்னதா்மம் நடைபெற்றது. இரவு 2 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் நடுத்தீா்ப்பு தந்து முன் நின்று அம்மாவுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அய்யா அன்புக் கொடி மக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டு வழிபட்டனா்.

திருவிழா ஏற்பாடுகளை கீழச்சிவந்திபுரம் ஊா்ப் பொதுமக்கள் மற்றும் அன்புக் கொடி மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT