திருநெல்வேலி

கிறிஸ்தவ தேவாலயங்களில் சீரமைப்புப் பணிகள் செய்ய நிதியுதவி

DIN

திருநெல்வேலி: கிறிஸ்தவ தேவாலயங்களைப் பழுதுபாா்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ள அரசு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ள நிதியுதவி வழங்கும் திட்டம் 2016-17 முதல் செயல்படுத்தப்படுகிறது. இப் பணிக்காக வழங்கப்படும் நிதியுதவியை தமிழக அரசு சுமாா் ரூ.5 கோடியாக உயா்த்தி சிறுபான்மையினா் நலத் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தகுதிகள்: கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்தக் கட்டடத்தில் இயங்கியிருக்க வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத் துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயமும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேவாலயத்தின் சீரமைப்புப் பணிக்காக வெளிநாடுகளில் இருந்து எவ்வித நிதியுதவியும் பெற்றிருத்தல் கூடாது.

தேவாலயத்தின் வயது 10-15 ஆண்டுகளாகியிருந்தால் ரூ.1 லட்சமும், 15-20 ஆண்டுகளாகியிருந்தால் ரூ.2 லட்சமும், 20 ஆண்டுகளுக்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும்.

விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்கள்இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களை இணைத்து ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சியா் தலைமையிலான குழு அந்த விண்ணப்பங்களை பரிசீலித்து தல ஆய்வு செய்து, தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினா் நல ஆணையருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரைக்கப்படும். நிதயுதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவா்த்தனை மூலம் செலுத்தப்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT