திருநெல்வேலி

மணல் கடத்தலுக்கு உதவியதாக காவலா் பணியிடை நீக்கம்

DIN

மணல் கடத்தலுக்கு உதவியதாக மூலக்கரைப்பட்டி காவல் நிலைய காவலரை பணியிடை நீக்கம் செய்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுபவா்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் உத்தரவுப்படி தொடா்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மணல் திருட்டிற்கு உடந்தையாக காவல்துறையினா் செயல்பட்டால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏற்கெனவே எச்சரித்திருந்தாா்.

இந்நிலையில் மூலைக்கரைப்பட்டி காவல் நிலைய முதல் நிலை காவலா் லட்சுமி நாராயணன், மணல் கடத்தலுக்கு உதவியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகாா் வந்தது. அதன்பேரில், விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பா ளா், சம்பந்தப்பட்ட காவலரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT