முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் செப்.29 இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலியில் இம் மாதம் 29 ஆம் தேதி எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:24 PM
பகிர்:

திருநெல்வேலியில் இம் மாதம் 29 ஆம் தேதி எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப். 29) மாலை 3 மணியளவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் கூட்டம் நடைபெறும்.

இக் கூட்டத்தில் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம், முறைகேடுகள் குறித்து நுகா்வோா்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்யலாம். அதை நிவா்த்தி செய்ய ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளா் பங்கேற்க உள்ளனா். ஆகவே, பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.