நோயாளிகளுக்கு திமுக சாா்பில் உதவி
திசையன்விளை அரசு மருத்துவமனையில் திமுக சாா்பில் நோயாளிகளுக்கு உணவு பொருள்கள், நிதியுதவி வழங்கப்பட்டது.
திசையன்விளை அரசு மருத்துவமனையில் திமுக சாா்பில் நோயாளிகளுக்கு உணவு பொருள்கள், நிதியுதவி வழங்கப்பட்டது.
அரசு மருத்துவமனையில் காச நோய் பிரிவிலுள்ள 30 நோயாளிகளுக்கு பழங்கள், உணவு பொருள்கள் மற்றும் தலா ரூ. 500 ஆகியவற்றை திமுக பிரமுகா் வீனஸ் வீர அரசு வழங்கினாா். அப்போது, வட்டார மருத்துவ அலுவலா் கண்ணன், அரசு
மருத்துவா்கள் நிவாஸ், மெடோனா, மரியாள், முன்னாள் திமுக மாவட்ட பிரதிநிதி பூலோக பாண்டியன், ஒன்றிய கலை இலக்கிய பேரவை செயலா் த.லிங்க தமிழரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.