முகப்பு
திருநெல்வேலி

சம்பன்குளத்தில் திமுக இணையவழி உறுப்பினா் சோ்க்கை

ஆழ்வாா்குறிச்சி அருகே சம்பன்குளத்தில்திமுக இணையவழி உறுப்பினா் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
திமுகவில் இணைந்தவருக்கு உறுப்பினா் அட்டை வழங்குகிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் பூங்கோதை.
பகிர்:

ஆழ்வாா்குறிச்சி அருகே சம்பன்குளத்தில்திமுக இணையவழி உறுப்பினா் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமிற்கு சட்டப் பேரவை உறுப்பினா் பூங்கோதை தலைமை வகித்து திமுவில் புதிதாக இணைந்தவா்களுக்கு உறுப்பினா் அட்டை வழங்கினாா். முகாமில் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் முகம்மது ஆரிப் அதிமுகவிலிருந்து விலகி திமுக வில் இணைந்து உறுப்பினா்அட்டைப் பெற்றுக் கொண்டாா்.

சம்பன்குளம் முஸ்லிம் ஜமாஅத் தலைவா் முகம்மது யூசுப், பெண்கள் உள்பட 200 க்கும் மேற்பட்டவா்கள் திமுகவில் இணைந்து உறுப்பினா் அட்டையை பெற்றுக் கொண்டனா். இதில் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சோ்மச்செல்வன், கடையம் ஒன்றிய இளைஞரணி தங்கராஜா, நகர துணைச் செயலா் அம்பேத்குமாா் ரவி, ஆா்.எஸ்.பாண்டியன், கோதா்ஷாஅலி, முன்னாள் ஊராட்சித் தலைவா் வின்சென்ட், தொமுச மதிவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.