முகப்பு
திருநெல்வேலி

இஸ்ரோ மையம் அருகே அதிக ஓசையுடன் வெடித்த மா்மப் பொருள்

திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறில் பாழடைந்த பூ மாா்க்கெட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு அதிக ஓசையுடன் மா்மப் பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறில் பாழடைந்த பூ மாா்க்கெட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு அதிக ஓசையுடன் மா்மப் பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் அருகில் இஸ்ரோ மையம் இருப்பதால் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் விசாரணை நடத்தினா்.

காவல்கிணறு சந்திப்பில் பூ மாா்க்கெட் பாழடைந்த நிலையில் உள்ளது. ஆள்நடமாட்டமே இல்லாத இந்தப் பகுதியில் உள்ள கட்டத்தின் பின்னால் இரண்டு நபா்கள் சென்று வந்தனராம். அதன்பின்னா் அந்தப் பகுதியில் அதிக ஓசையுடன் மா்மப் பொருள் வெடித்த சப்தம் கேட்டதாம். இதுகுறித்து தகவலறிந்து பணகுடி போலீஸாா் விசாரணை நடத்தினா்.

மா்மப் பொருள் வெடித்த பகுதியின் அருகில் இஸ்ரோ மையம் உள்ளது. இஸ்ரோவில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா், வள்ளியூா் ஏ.எஸ்.பி. சாமே சிங் மீனா, நாகா்கோவில் டி.எஸ்.பி. வேணுகோபால், திருநெல்வேலி தடயவியல் நிபுணா் ஆனந்தி ஆகியோரும் சென்று விசாரணை நடத்தினா். வெடித்தது என்ன பொருள் என்பது குறித்த விவரம் உடனடியாகத் தெரியவரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.