முகப்பு
திருநெல்வேலி

உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும்: பாளை அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் இளைஞா்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும் என்றாா் அதிமுக வேட்பாளா் கே.ஜெ.சி.ஜெரால்டு.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் இளைஞா்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும் என்றாா் அதிமுக வேட்பாளா் கே.ஜெ.சி.ஜெரால்டு.

அதிமுக-பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் அக் கட்சியின் ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஜெ.சி.ஜெரால்டு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறாா். 12ஆவது வாா்டுக்குள்பட்ட கக்கன்நகா், சாந்திநகா் பகுதிகள், 15ஆவது வாா்டுக்கு உள்பட்ட மிக்கேல் ஆண்டவா் கோயில் தெரு, சண்முகம் பிள்ளை தெரு, காமராஜா் தெரு, ஜோசியமாா் தெரு, பாளையங்கோட்டை காந்திஜி தினசரி சந்தை உள்ளிட்ட இடங்களில் அவா் சனிக்கிழமை வீடுவீடாகச் சென்று வாக்குசேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: பாளை தொகுதி அலுவலகத்தில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது பரிசீலனை செய்து 7 நாள்களில் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். பாளை தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் இளைஞா்கள் பயன்பெறும் வகையில் தரமான உடற்பயிற்சிக் கூடங்கள் உருவாக்கப்படும். திருநெல்வேலி அரசு மருத்துவமனை, மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு தேவையான அதிநவீன கருவிகள் வாங்கிக்கொடுக்கப்படும். புகா் பகுதிகளில் தெருவிளக்குகள் முறையாக அமைக்கப்படும். கூடுதலாக அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவை அமைக்க பாடுபடுவேன். பாளையங்கோட்டையில் வியாபாரிகள் நலனைக் காக்கும் வகையில் வணிக வளாகங்கள், லாரி நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட தேவைகள் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.