திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில் பங்குனித் தேரோட்டம்
திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில் பங்குனித் தேரோட்டம் திங்கள்கிழமை (ஏப்.5) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில் பங்குனித் தேரோட்டம் திங்கள்கிழமை (ஏப்.5) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
108 வைணவத் தலங்களில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் நின்ற நம்பி, இருந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருப்பாற்கடல் நம்பி, திருமலைநம்பி ஆகிய 5 நிலைகளில் நம்பி சுவாமி காட்சி அளிக்கிறார்.
இக்கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. 6ஆம் திருநாளான வியாழக்கிழமை (ஏப்.1) அதிகாலை நம்பி சுவாமிகள் 5 நிலைகளில் மேலரத வீதியில் தேவகந்தர்வ மகரிஷிகளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை சேவித்தனர். தேரோட்டம் - விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10ஆம் திருநாளான திங்கள்கிழமை நடைபெற்றது. ராமானுஜ ஜீயர் சுவாமி வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் ரத வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலைக்கு வந்தது.