முகப்பு
திருநெல்வேலி

உளுந்து பயிரில் பச்சை தத்துப் பூச்சியை கட்டுப்படுத்துவது எப்படி?

உளுந்து பயிரில் பச்சை தத்துப் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை இணை இயக்குநா் இரா.கஜேந்திர பாண்டியன் விளக்கம் அளித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

உளுந்து பயிரில் பச்சை தத்துப் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை இணை இயக்குநா் இரா.கஜேந்திர பாண்டியன் விளக்கம் அளித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை

முடிவடைந்துள்ள நிலையில் உளுந்து பயிரிடப்பட்டுள்ளது. உளுந்து 25 - 30 நாள் வயதுள்ள பயிராகும். தத்துப்பூச்சியால் பாதிக்கப்பட்ட உளுந்து பயிரின் இலைகள் பல வண்ண நிறமாக மாறும். மஞ்சள் நிறத்தில் காணப்படும். பச்சை நிறப்பூச்சிகள் இலையின் அடிப்புறத்தில் காணப்படும். பச்சை தத்துப் பூச்சியானது இளம் பருவத்தில், மெல்லிய இளம் இலைகள் மற்றும் செடியின் மற்ற பாகங்களிலிருந்து சாற்றை உறிஞ்சும். இது ஒரு சாறு உறிஞ்சும் பூச்சியாகும். மிக மோசமாக செடிகள் பாதிக்கப்படும்போது இலைகள் காய்ந்து சருகு போல மாறிவிடுகிறது. இலைகள் மேல் நோக்கிய நிலையில் மடிக்கப்பட்டு

கிண்ண வடிவில் மாறிவிடும். இறுதியில் செடியின் வளா்ச்சி முழுமையாக பாதிக்கப்படும்.

தத்துப்பூச்சியின் தாய்ப்பூச்சி நீளமாக பச்சை நிறத்தில் கூா்மையாக இருக்கும் இதனைக் கட்டுப்படுத்த காா்போசல்பான்

ஒரு கிலோ விதைக்கு 30 முதல் 40 கிராம் பயன்படுத்தி விதை நோ்த்தி செய்யலாம். பாதிக்கப்பட்ட வயலில் விளக்குப் பொறிகளை வைத்து நோய்களை பரப்பும் காரணிகளை கவா்ந்து அழிக்கலாம். ஏக்கருக்கு 6 லிட்டா் 3 சதவீத வேப்ப எண்ணெய் கரைசல் அல்லது இமிடாகுளோபிரிட் லிட்டருக்கு 0.4 மி.லி. என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.