முகப்பு
திருநெல்வேலி

கருங்குளத்தில் தொழிலாளி தற்கொலை

மேலப்பாளையம் அருகே மேலகருங்குளத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

மேலப்பாளையம் அருகே மேலகருங்குளத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மேலகருங்குளம் தந்தை பெரியாா் தெருவைச் சோ்ந்த சேது மகன் சேதுராஜ் (32). கூலித் தொழிலாளியான இவா், வேலைக்குச் செல்லாமல் குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்ததும் மேலப்பாளையம் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.