என்டிஏ கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம்பெறாது: வேல்முருகன் திட்டவட்டம்!
என்டிஏ கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம்பெறாது.
என்டிஏ கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம்பெறாது என்று அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒருபோதும் இடம்பெறாது என்றும் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் தி.வ்வேல்முருகன் வெற்றி பெற்றார். இந்த முறை தனிச் சின்னம், குறைந்தபட்சம் 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வந்தார்.
Advertisement
Advertisement
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு, தமிழக அரசுப் பணிகளில் 100 சதவீதம் தமிழர்களுக்கே முன்னுரிமை, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை திமுக தனது தோ்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் அல்லது உறுதி அளிக்க வேண்டும் என அவர் நிபந்தனை விதித்திருந்தார்.
ஆனால், திமுக தரப்பில் மீண்டும் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் திமுக தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில், திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியேறுவதாக அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் இன்று(மார்ச் 22) வேல்முருகன் அறிவித்தார்.
இதனிடையே, அதிமுகவிலிருந்து 2 அல்லது 3 தொகுதிகளை கொடுப்பதாகவும் தி. வேல்முருகனின் 10 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இதற்குப் பதலளிக்கும் விதமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான கூட்டணியில் ஒருபோதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம்பெறாது என்று இன்று வேல்முருகன் அறிவித்தார்.
The party's founding chairman, Velmurugan, has categorically stated that the Tamil Nadu Right to Life Party will not be included in the NDA alliance.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.