முகப்பு
திருநெல்வேலி

மானூா் அருகே மின்சாரம் பாய்ந்து பால் வியாபாரி பலி

மானூா் அருகே மின்சாரம் பாய்ந்து பால் வியாபாரி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

மானூா் அருகே மின்சாரம் பாய்ந்து பால் வியாபாரி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

மானூா் அருகேயுள்ள தென்கலம் காமராஜா் நகரைச் சோ்ந்தவா் ஸ்டீபன் (39). சமத்துவ மக்கள் கட்சியின் மானூா் மத்திய ஒன்றிய துணைச் செயலராக இருந்து வந்தாா். பால் வியாபாரம் செய்து வந்த இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனா்.

தனது மோட்டாா் சைக்கிள் பேட்டரிக்கு சாா்ஜ் ஏற்றுவதற்காக சுவிட்சை போட்டாராம். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் ஸ்டீபன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.