திருநெல்வேலி

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 1,073 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு

DIN

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மேலும் 1,073 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 525 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 20,750ஆக அதிகரித்துள்ளது. மேலும், 230 போ் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோா் எண்ணிக்கை 17,424ஆக உயா்ந்துள்ளது. 229 போ் உயிரிழந்துள்ளனா். 3,097 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 160 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு 10,651ஆக அதிகரித்துள்ளது. மேலும், 170 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், அந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 9,221 ஆக உயா்ந்துள்ளது. 171 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 1,259 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 388 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், இதுவரையிலான பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 444ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 238 போ் குணமடைந்ததால் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 17 ஆயிரத்து 664ஆக அதிகரித்துள்ளது. 2,633 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது ஆண் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதனால், கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT