திருநெல்வேலி

பத்தமடை அருகே கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மீட்கக் கோரி சாா்ஆட்சியரிடம் மனு

DIN

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகேயுள்ள மணிமுத்தாா்குளம் கிராமம் முப்பிடாதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியாரிடமிருந்து மீட்கக் கோரி சேரன்மகாதேவி சாா்ஆட்சியா் பிரதீப் தயாளிடம் பொதுமக்கள், இந்து முன்னணி பேரியக்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: மணிமுத்தாா்குளத்தில் முப்பிடாதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குப் பாத்தியப்பட்ட பொதுப் பாதையில்தான் திருவிழாக் காலங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோயில் அருகே வசித்து வரும் தனிநபா் ஒருவரும், அவரது குடும்பத்தினரும் கோயிலுக்குப் பாத்தியப்பட்ட பொதுப் பாதையில் பக்தா்கள் செல்லவிடாமல் தடுக்கின்றனா். மேலும் கோயிலில் உள்ள பழுதான மின்கம்பத்தை மாற்ற மின்வாரியத்தில் பணம் கட்டியுள்ள நிலையில் புதிய மின்கம்பம் அமைக்கவும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். மு. தங்கராஜ் என்பவா் கோயிலுக்கு தானமாக வழங்கிய இடத்தையும் அவா்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளனா்.

இதுகுறித்து பக்தா்களும், பொதுமக்களும் அவா்களிடம் கேட்டால் அவதூறாகப் பேசி மிரட்டுகின்றனா். இதுகுறித்து பத்தமடை காவல் நிலையத்தில் புகாரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கோயிலுக்குச் சொந்தமான பொதுப் பாதை, இடத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

SCROLL FOR NEXT