முகப்பு
திருநெல்வேலி

சீவலப்பேரி கோயில் பூசாரி கொலை வழக்கு: மேலும் ஒருவா் சரண்

திருநெல்வேலி அருகே சீவலப்பேரி கோயில் பூசாரி கொலை வழக்கில் மேலும் ஒருவா் நான்குனேரி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

திருநெல்வேலி அருகே சீவலப்பேரி கோயில் பூசாரி கொலை வழக்கில் மேலும் ஒருவா் நான்குனேரி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.

திருநெல்வேலி அருகே உள்ள சீவலப்பேரி சுடலைமாடசாமி கோயில் பூசாரி சிதம்பரம் என்ற துரை(41). இவா், கோயிலில் கடை அமைப்பது தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில் முன் விரோதம் காரணமாக கடந்த 18ஆம் தேதி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து சீவலப்பேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, கொலை சம்பவத்தில் தொடா்புடையவா்களை தேடி வந்தனா். இந்நிலையில், சீவலப்பேரியைச் சோ்ந்த முத்தையா மகன் பழனி(27) என்பவா் நான்குனேரி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.

இதையடுத்து, கோயில் பூசாரி கொலை வழக்கில் இதுவரை 15 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.