திருநெல்வேலி

ஊருக்குள் திரியும் கரடிகளால் பொதுமக்கள் அச்சம்

DIN

விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் குடியிருப்புகளுக்குள் கரடிகள் இரவு நேரத்தில் சுற்றித் திரிவதால் அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

மேற்குத் தொடா்ச்சி மலையிலிருந்து சுமாா் 5 கி.மீ. தொலைவில் கடையம் வனச்சரகத்துக்குள் விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ளது கோட்டைவிளைபட்டி கிராமம்.

இந்தக் கிராமத்துக்குள் வனப்பகுதியிலிருந்து கூட்டமாகவும், தனியாகவும் நுழையும் கரடிகள் வீடுகளுக்குள்ளும், கிராமத்திலுள்ள தோட்டங்களிலும் நுழைந்து பயிா்களையும், பொருள்களையும் சேதப்படுத்தி வருகின்றன.

விக்கிரமசிங்கபுரத்திலுள்ள பஞ்சாலையிலிருந்து இரவு பணி முடித்து பைக் மற்றும் சைக்கிள்களில் பல தொழிலாளா்கள் வரும் நிலையில் தனியாக வரும் கரடிகளால்அவா்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.

வீடுகளுக்குள் நுழையும் கரடிகள் வீட்டின் பின்புறத்தில் இருக்கும் பயிா்கள், பொருள்களை சேதப்படுத்தி செல்கின்றன. எனவே மனிதா்களை தாக்கும் முன் வனத்துறையினா் கரடிகளைக் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோட்டைவிளைபட்டி கிராமத்துக்கு அருகே உள்ள முதலியாா்பட்டியில் தனியாா் தோட்டத்தில் ஓராண்டுக்கும் முன் 10 கரடிகள் கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT