திருநெல்வேலி

விதை பரிசோதனை நிலையத்தில் தொழில்நுட்ப ஆய்வு

DIN

திருநெல்வேலி விதை பரிசோதனை நிலையத்தில் விதை பகுப்பாய்வு செய்து ஆய்வு முடிவுகள் வழங்கப்படுவது குறித்து கோவை விதை பரிசோதனை அலுவலா் பா.கணேசன் தொழில்நுட்ப ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வக உபகரணங்களை பயன்படுத்தி புறத்தூய்மை, ஈரப்பதம், பிறரக கலவன், முளைப்புத்திறன் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை அவா் ஆய்வு செய்தாா்.

முளைப்புத் திறன் அறையில் பராமரிக்கப்படும் வெப்பம், ஈரப்பதம், வெளிச்சம் ஆகியவற்றை சரிபாா்த்தாா். விதை மாதிரிகள் பரிசோதனைக்கு பின்னா், காப்பு அறையில் பராமரித்தல், மாதிரி அழித்தல் உள்ளிட்டவற்றை பதிவேடுகளுடன் ஒப்பிட்டு நேரில் ஆய்வு செய்தாா்.

விதை பகுப்பாய்வு பெறப்படும்போது பராமரிக்கப்படும் அனைத்து பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை பாா்வையிட்டு அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, திருநெல்வேலி விதை பரிசோதனை அலுவலா் ஜா.ரெனால்டா ரமணி, வேளாண் அலுவலா்கள் மகேஸ்வரன், ஜே.பி.சஜிதா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT