முகப்பு
திருநெல்வேலி

அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாரம்

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு வார நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு வார நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவப் பிரிவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மருத்துவ கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் முதல்வா் பேசியது: கரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். கரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு குழுவினா் எளிதாக புரியும் வகையில் தெரிவிக்க வேண்டும். மேலும், வீடுகளில்

தரைப் பகுதிகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இருமல் வந்தால் வாய் மற்றும் மூக்கை மூடுவதற்குப் பதிலாக

கைக்குட்டை பயன்படுத்த வேண்டும். கூட்டம் அதிகமாக கூடும் இடங்கள், நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து குழந்தைகள் நலப்பிரிவு துறைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, தாய்மாா்களுக்கு

ஆலோசனைகள் வழங்கினாா். பின்னா், கரோனா விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. கரோனா தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஏற்பாடுகளை, செவிலியா் பயிற்றுநா் செல்வன், விழிப்புணா்வு குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.