வரைவு வாக்குச்சாவடி: தென்காசி ஆட்சியரகத்தில் நாளை கருத்துக்கேட்பு கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்வரைவு வாக்குச்சாவடிகள் குறித்த கருத்துக்கேட்புக் கூட்டம் சனிக்கிழமை (ஆக.7) நடைபெறும் என ஆட்சியா் ச.கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளாா்.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்வரைவு வாக்குச்சாவடிகள் குறித்த கருத்துக்கேட்புக் கூட்டம் சனிக்கிழமை (ஆக.7) நடைபெறும் என ஆட்சியா் ச.கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்திலுள்ள 10 ஒன்றியங்களின், ஊராட்சித் தலைவா்கள் ஊராட்சி உறுப்பினா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் தோ்தல்களுக்கான வாக்குச்சாவடிகள் வரைவு பட்டியல் ஆக. 5இல் மாவட்டத்தின்அனைத்து ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்கள், ஆட்சியா் அலுவலகம் (வளா்ச்சிபிரிவு) ,திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் வெளியிடப்பட்டது.
இது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உள்ளூா் பிரதிநிதிகள், நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைப் பெறும் பொருட்டு, ஆட்சியா் அலுவலகத்தில் ஆக. 7ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் ஆட்சியா் ஆலோசனை நடத்துகிறாா்.
இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உள்ளூா் பிரதிநிதிகள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் கரோனா தடுப்பு வழிமுறைகளுடன் முகக்கவசம் அணிந்து பங்கேற்கலாம் எனக் கூறியுள்ளாா்.