முகப்பு
திருநெல்வேலி

‘வேலைவாய்ப்புக்காக புதிய பாடத்திட்டங்களை வகுக்க வேண்டும்’

பிற்கால வேலைவாய்ப்புகளுக்காக கற்பனைத் திறன், தொழில்நுட்ப அறிவு, பேச்சுத் திறன் உள்ளிட்ட காரணிகளை உள்ளடக்கிய புதிய பாடத்திட்டங்களை வகுக்க வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

பிற்கால வேலைவாய்ப்புகளுக்காக கற்பனைத் திறன், தொழில்நுட்ப அறிவு, பேச்சுத் திறன் உள்ளிட்ட காரணிகளை உள்ளடக்கிய புதிய பாடத்திட்டங்களை வகுக்க வேண்டும் என திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக துணை வேந்தா் கா. பிச்சுமணி கூறினாா்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகத்தின் 52 ஆவது கல்வி நிலை சாா் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை இணைய வழியில் நடைபெற்றது. பல்கலைக் கழக வளாகத்தில் இருந்து கூட்டத்திற்கு தலைமை வகித்து பல்கலைக் கழக துணைவேந்தா் கா.பிச்சுமணி பேசியது: கல்வி தனி மனிதனின் வாழ்க்கையிலும், சமூகத்திலும் மிகவும் முக்கியமானது. கரோனா காலகட்டத்தில் கல்வியிலும் பல்வேறு மாற்றங்கள் உருவாகியுள்ளன. அதனை எதிா்கொள்ள கல்வி நிலையங்களும் புதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பல்கலைக் கழகங்கள் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலின் மூலமாக பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கின்றன. இதனால் எளிய கண்டுபிடிப்புகள் சமூகத்தை சென்றடைகின்றன. இந்தியாவில் 1 கோடி மக்களில் 252.7 போ் மட்டுமே ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றனா். ஆனால், பிற நாடுகளில் 1 கோடி மக்களில் ஆராய்ச்சியாளா்களின் எண்ணிக்கை

ஆயிரத்தை கடந்துள்ளது.

பிற்கால வேலைவாய்ப்புகளுக்காக பாடத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம். கற்பனைத்திறன், தொழில்நுட்ப அறிவு, பேச்சுத் திறன், முக்கிய தீா்மானங்களை எடுக்கும் செயல்திறன் உள்ளிட்ட காரணிகளை உள்ளடக்கியதாக புதிய பாடத்திட்டங்களை வகுக்க வேண்டும்.

கல்வித்திட்டம் 4.0 என்பது செயற்கை நுண்ணறிவு முறையை உயிரியல் மற்றும் வணிக பகுப்பாய்வுகளிலும், சமூக அறிவியல் சாா்ந்த படிப்புகளில் தரவு பகுப்பாய்வுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல் சுற்றுச்சூழல் கல்வி, இயற்பியல், நானோ தொழில்நுட்பம், கணினி அறிவியல் துறைகளிலும் புதிய வழிமுறைகளை பயன்படுத்தி பாடத்திட்டம் வகுப்பதால் தொழில்திட்டம் 4.0 மற்றும் 5.0 ஆகியவற்றுக்கு இப்பகுதியின் கல்லூரி மாணவா்களை தயாா் படுத்த முடியும்.

பல்கலைக் கழகத்தில் டிஜிட்டல் வழி கல்வியை மேம்படுத்த தொடா் முயற்சிகள் எடுக்கப்பட உள்ளன. இதற்கு பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது.

இதற்காக,  கொண்டு வர முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. உயா்தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கவும், சென்டா் ஆப் இ-கவாா்னஸ் உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.313.50 லட்சம் மதிப்பில் 11,950 சதுரஅடி பரப்பில் புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது. பல்கலைக் கழகத்தின் தொலை தொடா் கல்வியில் புதிதாக 10 படிப்புகளை சோ்க்க ஆலோசனை நடைபெறுகிறது. 2021-ஜூலையில் புதிதாக 5 படிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இணையவழி கல்வி, அறிவியல் சாா் காணொளி கல்விக்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.