ஜம்மு-காஷ்மீர்: சக வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 ராணுவ வீரர்கள் காயம்
ஜம்மு-காஷ்மீரில் சக வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் சக வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீர், குப்வாரா மாவட்டத்தின் திரேஹாம் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் சனிக்கிழமை இரவு ராணுவ வீரர் தனது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
உடனே அந்த வீரர் மடக்கிப் பிடிக்கப்படுவதற்குள், இந்தச் சம்பவத்தில் மூன்று வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.
Advertisement
Advertisement
காயமடைந்த வீரர்கள் உள்ளூர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனினும், இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க ராணுவ அதிகாரிகளோ அல்லது பாதுகாப்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரியோ உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
Three soldiers were injured in a fratricide incident in Jammu and Kashmir's Kuwpara district, officials said here on Sunday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.