FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

‘பாகிஸ்தான் காஷ்மீர்’ எனக் குறிப்பிட்ட அமெரிக்க ஊடகத்துக்கு இந்திய தூதரகம் கண்டனம்!

‘பாகிஸ்தான் காஷ்மீர்’ எனக் குறிப்பிட்ட அமெரிக்க ஊடகத்துக்கு இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...

Updated On : 30 ஜூலை 2026, 11:30 am IST
இந்திய தூதரகம் கண்டனம் - கோப்புப்படம்
பகிர்:

‘பாகிஸ்தான் காஷ்மீர்’ எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்ட அமெரிக்க ஊடகத்துக்கு இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பிராந்திய பேரவைத் தோ்தலில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் 14 போ் உயிரிழந்தனா், பலா் காயமடைந்தனா்.

இதுதொடர்பான செய்தியை வெளியிட்ட அமெரிக்காவின் ’நியூ யார்க் டைம்ஸ்’ செய்தி நிறுவனத்தின் தலைப்பில், “பாகிஸ்தான் காஷ்மீர் தேர்தலில் புதிய மோதல் வெடித்தது” என்று குறிப்பிட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த செய்தியை மேற்கோள்காட்டி இந்திய தூதரகம் தெரிவித்திருப்பதாவது:

“நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்ட தலைப்பு தவறானது மற்றும் மக்களைத் திசைதிருப்பக் கூடியது. 'பாகிஸ்தான் காஷ்மீர்' என்று எதுவும் இல்லை. 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்' மட்டுமே உள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் பிரிக்க முடியாத மற்றும் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் இருந்திருக்கின்றன, இருக்கின்றன, இனியும் இருக்கும். இந்தப் பகுதிகளின் சில பகுதிகளை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதுடன், தற்போது அங்குள்ள மக்கள் மீது வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

summary

Indian Embassy condemns US media outlet for referring to the region as ‘Pakistan Kashmir’!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments