லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!
ஆசியக் கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு...
ஆசியக் கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்துள்ளார்.
மகளிருக்கான 10-ஆவது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றியது.
இந்த நிலையில், மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
Advertisement
”இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு பெருமைக்குரிய தருணம்!
ஆசியக் கோப்பையை வென்ற மகளிர் அணிக்கு வாழ்த்துகள். இந்தத் தொடர் முழுவதும் அவர்களின் தன்னம்பிக்கை, சீரான ஆட்டத்திறன் மற்றும் சிறப்பான மன உறுதி ஆகியவை வெளிப்பட்டன.
இந்த வெற்றி, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் ஈடுபட்டுச் சிறந்து விளங்க உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நேற்றிரவு நடைபெற்ற கோப்பை வழங்கும் விழாவில், சாம்பியனான இந்திய மகளிா் அணி, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருமான மோசின் நக்வியின் கையால் வெற்றிக் கோப்பையைப் பெற மறுத்துவிட்டது.
ஏற்கெனவே கடந்த ஆண்டு இந்திய ஆடவா் அணி ஆசிய கோப்பை போட்டியில் சாம்பியன் ஆனபோதும், இதேபோல் மோசின் நக்வி கையால் கோப்பை பெற மறுத்தது நினைவுகூரத்தக்கது. அந்தக் கோப்பை இன்னும் இந்தியாவிடம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
An inspiration to millions of young people! Modi praises the Indian women's team!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.