FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 25 ஜூலை 2026, 6:26 pm IST
அமர்நாத் யாத்திரை
பகிர்:

பஹல்காம் வழித்தடத்திலான அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக காஷ்மீர் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். நடப்பாண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூலை 3-ம் தேதி தொடங்கியது.

குழந்தைகள், ஆண்கள், பெண்கள், முதியோர்கள், சாதுக்கள் உள்பட பலர் அமர்நாத் யாத்திரையில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில் பஹல்காம் வழித்தடத்திலான அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக காஷ்மீர் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

காஷ்மீர் கோட்ட ஆணையர் அன்ஷுல் கார்க் கூறுகையில், " பால்டால் பாதை வழியாக அமர்நாத் யாத்திரை தொடர்ந்து நடைபெறும். அதே வேளையில், பஹல்காம் பாதை புனிதப் பயணத்திற்காக தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும். சமீபத்திய மழையின் காரணமாக பஹல்காம் வழியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

யாத்திரை தடையின்றி தொடர்வதை உறுதி செய்வதற்காக, பக்தர்கள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் பயணிக்க பால்டால் பாதையில் முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் இதுவரை 3.95 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித அமர்நாத் குகைக் கோயிலில் தரிசனம் செய்துள்ளனர்.

இது யாத்திரையின் வெற்றிகரமான மற்றும் அமைதியான நடத்தையைப் பிரதிபலிக்கிறது," என்று தெரிவித்தார்.

summary

Authorities in Kashmir on Saturday said the Amarnath Yatra will remain "temporarily" suspended from the Pahalgam axis to carry out repair and maintenance works necessitated by the rainfall in Kashmir over the last few days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments