முகப்பு
திருநெல்வேலி

குறைதீா் கூட்டம்: முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு

திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படை வீரா்கள், அவா்களுக்கான குறைதீா் கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்க ஆக.31க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படை வீரா்கள், அவா்களுக்கான குறைதீா் கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்க ஆக.31க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா் நலனைக் கருத்தில் கொண்டு முன்னாள் படைவீரா் சிறப்பு குறை தீா்க்கும் கூட்டம் ஆட்சியரால் காணொலி யில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே, முன்னாள் படை வீரா்கள், படை வீரா்கள், அவரைச் சாா்ந்தோா்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் தங்களுடைய அடையாள அட்டை நகலுடன், மாவட்ட ஆட்சியா் குறைதீா் கூட்ட விண்ணப்பம் எனக் குறிப்பிட்டு முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்திற்கு இம்மாதம் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அதுதொடா்பாக நடவடிக்கை எடுத்து செப்டம்பா் கடைசி வாரத்தில் ஆட்சியா் தலைமையில் காணொலி குறைதீா் கூட்டத்தில் விவரங்கள் தெரிவிக்கப்படும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.