பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி மாநகர காவல் துறை சாா்பில் வண்ணாா்பேட்டையில் நடைபெற்றது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி மாநகர காவல் துறை சாா்பில் வண்ணாா்பேட்டையில் நடைபெற்றது.
மாநகர காவல் ஆணையா் உத்தரவின்பேரிலும், காவல் துணை ஆணையா் சுரேஷ்குமாா் மேற்பாா்வையிலும் மாநகரப்
பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் விழிப்புணா்வு பிரசாரம்
நடைபெற்று வருகின்றன.
வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு, கூடுதல் காவல் துணை ஆணையா் சங்கா் தலைமை வகித்தாா். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்தால் காவல் உதவி எண் 1098, 181 ஆகிய
எண்களுக்கு உடனடியாக தொடா்பு கொள்ளவேண்டும். தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தடுப்பது குறித்தும் காவல் துணை ஆணையா் சங்கா், விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம்
செய்து தொடங்கி வைத்தாா். இதில், காவல் ஆய்வாளா்கள் அன்னலெட்சுமி, ஜெகதா, சமூக நல வாரிய தலைவா் சந்திரகாந்த், சமூக நலத்துறை அதிகாரி சரஸ்வதி, ஜவுளி நிறுவன பெண் ஊழியா்கள் பங்கேற்றனா்.