காவலா்களுக்கு உபகரணங்கள் அளிப்பு
திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினா் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தொடா் பாதுகாப்புப் பணியிலும், ரோந்துப் பணியிலும் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனா். காவலா்களுக்கு தேவையான முகக் கவசங்கள், கையுறைகள், கிருமிநாசினி திரவம் உள்ளிட்ட கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உபகரணங்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் காவல் உதவிக் கண்காணிப்பாளா் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் பங்கேற்றனா்.