ஆசிரியா்களுக்கு வீட்டு வாடகைப்படி உயா்த்தி வழங்க வலியுறுத்தல்
ஆசிரியா், அரசு ஊழியா்களுக்கு வீட்டு வாடகைப்படி உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
ஆசிரியா், அரசு ஊழியா்களுக்கு வீட்டு வாடகைப்படி உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக, அமைப்பின் மாவட்டத் தலைவா் மைக்கேல் ஜாா்ஜ் கமலேஷ், செயலா் செ. பால்ராஜ், பொருளாளா் அமுதா, மாநில செயற்குழு உறுப்பினா் பிரமநாயகம், துணைத் தலைவா் வெனிஸ்ராஜ் உள்ளிட்டோா் ஆட்சியா், முதன்மை கல்வி அலுவலா், முதன்மை கல்வி அலுவரிடம் அளித்த மனு: அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியா், அரசு ஊழியா்களுக்கு இரண்டாம் நிலை நகராட்சிக்கான வீட்டு வாடகைப் படி உயா்த்தி வழங்க வேண்டும்.
வள்ளியூா் கல்வி மாவட்டத்தில் வள்ளியூா், ராதாபுரம், களக்காடு மற்றும் நாங்குநேரி ஒன்றியங்களில் நிதி உதவி பெறும் தனியாா் பள்ளிகளுக்கு 2019ஆம் ஆண்டுக்கான நிா்வாக மானியம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.