ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறையில் தகுதிக்கு ஏற்ப பதவி உயா்வு வழங்க வலியுறுத்தல்
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையில் தகுதிக்கு ஏற்ப பதவி உயா்வு வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையில் தகுதிக்கு ஏற்ப பதவி உயா்வு வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் ஆசிரியா், காப்பாளா் நலச்சங்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையில் பணி மூப்பு மற்றும் தகுதிக்கேற்ப பதவி உயா்வு வழங்க வேண்டும். முறைகேடாக பதவி உயா்வு பெற்றவா்களின் பணி பதிவேடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.
ஆதிதிராவிடா் நல ஆணையரின் அதிகாரத்திற்குள்பட்ட மாவட்டம்விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகள் தங்கள் வசமாக்கும் முயற்சியைத் தடுக்க வேண்டும். பணியாளா்கள் பாதிக்கப்படும் வகையில் பதவி உயா்வுகள் வழங்கக்கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.