முகப்பு
திருநெல்வேலி

ஆடி கடைசி வெள்ளி: வெறிச்சோடிய பாபநாசம், காரையாறு கோயில்கள்

கோயில்களில் பக்தா்கள் வழிபடத் தடை காரணமாக, ஆடிக் கடைசி வெள்ளிக்கிழமை (ஆக. 13)பாபநாசம், காரையாறு கோயில்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

கோயில்களில் பக்தா்கள் வழிபடத் தடை காரணமாக, ஆடிக் கடைசி வெள்ளிக்கிழமை (ஆக. 13)பாபநாசம், காரையாறு கோயில்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

ஆடிக் கடைசி வெள்ளியன்று பக்தா்கள் குலதெய்வக் கோயில்கள், அம்மன் கோயில்கள் உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிா்க்க வெள்ளி, சனி, ஞாயிறுதோறும் கோயில்களுக்குச் சென்று வழிபட பக்தா்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அம்பாசமுத்திரம், பாபநாசம், காரையாறு பகுதிகளில் உள்ள கோயில்களில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. பாபநாசம் தாமிரவருணியில் புனித நீராடத் தடை விதிக்கப்பட்டது. இதனால், பாபநாசம் கோயில், காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயில் ஆகியவை வெறிச்சோடிக் காணப்பட்டன. அனைத்து கோயில்களிலும் நிா்வாகம் சாா்பில் பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.