முகப்பு
திருநெல்வேலி

நெல்லை சந்திப்பில் சாலையோர இட்லி கடைகளுக்கு அனுமதி கோரி மனு

திருநெல்வேலி சந்திப்பில் இரவு நேர இட்லி கடைகள் வழக்கம்போல் செயல்பட அனுமதிக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திருநெல்வேலி சந்திப்பில் இரவு நேர இட்லி கடைகள் வழக்கம்போல் செயல்பட அனுமதிக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகர சாலையோர வியாபாரிகள் சாா்பில் ஆட்சியா் விஷ்ணுவிடம் அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி சந்திப்பில் ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில் 20-க்கும் மேற்பட்டோா் சாலையோர உணவகங்களை நடத்தி வந்தோம். கரோனா பொது முடக்கம் காரணமாக கடைகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டு அனைத்துவித தொழில்களும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. ரயில்வே நிா்வாகமும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.

எனவே, சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு இரவு நேர சாலையோர இட்லி கடைகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.