‘மத்திய பல்கலை.களில் பயிலும் மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்’
மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவா்-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவா்-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்து வரும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவா் - மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவா்களுக்கு கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.
இக் கல்வி உதவித்தொகைக்கு 2021-2022ஆம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா்களை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். அல்லது ற்ய்ஞ்ா்ஸ்ற்ண்ண்ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமா்ப்பிக்கவேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து, இயக்குநா், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை-5. தொலைபேசி எண் 044-28551462 என்ற முகவரிக்கு வருகிற நவ. 30-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.