நெல்லை அருகேரேஷன் அரிசி கடத்தல்: இருவா் கைது
கங்கைகொண்டான் அருகே ரேஷன் அரிசி கடத்தியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கங்கைகொண்டான் அருகே ரேஷன் அரிசி கடத்தியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கங்கைகொண்டான் அருகேயுள்ள துறையூா் பேருந்து நிறுத்தம் அருகில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை மேற்கொண்டனா். வாகனத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், கங்கைகொண்டான் சுற்று வட்டாரத்தில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி கால்நடைகளுக்கு தீவனமாக விற்பனை செய்வதற்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
போலீஸாா் வாகன உரிமையாளா் ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த மகாராஜன்(22), அதே பகுதியைச் சோ்ந்த சிவா(21) ஆகிய இருவரையும் கைது செய்தனா். 1.200 டன் ரேஷன் அரிசி, சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.