முகப்பு
தமிழ்நாடு

அதிமுக இறுதி கட்ட வேட்பாளர்கள் வெளியீடு! முதல்வர் ஸ்டாலினுடன் யார் போட்டி?

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுகவின் இறுதி கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.

Updated On : 29 மார்ச், 2026 at 3:31 AM
முதல்வர் மு.க. ஸ்டாலின் | எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி - சித்திரிப்பு
பகிர்:

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுகவின் இறுதி கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுகவின் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 29) அறிவித்தார். முன்னதாக, இரண்டு கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்த நிலையில், இன்று இறுதிக்கட்டமாக வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

இதன்படி, திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் அதிமுகவின் துணைச் செயலாளர் சந்தானகிருஷ்ணன் போட்டியிடவுள்ளார்.

கடந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆதிராஜாராம், இந்த முறை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும், துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராக ராயபுரம் ஆர். மனோவும், திருச்சுழி தொகுதியில் தங்கம் தென்னரசுக்கு எதிராக ராஜவர்மனும் போட்டியிடுகின்றனர்.

summary

TN Assembly Election 2026: AIADMK Releases Final List of Candidates!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.