முகப்பு
தமிழ்நாடு

வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!

சென்னை மாவட்ட வாக்காளர் இறுதிப் பட்டியல் விவரங்கள்...

Updated On : 23 பிப்ரவரி 2026, 12:31 pm IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னை மாவட்டத்தின் வாக்காளர் இறுதிப் பட்டியலை மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை காலை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த பணிகள் நடைபெற்றன.

இந்த சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு முன்னதாக சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 40,04,694 வாக்காளர்கள் இருந்த நிலையில், சிறப்புத் தீவிர திருத்தம் செய்யப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 25,79,676 வாக்காளர்கள் பெயர் மட்டுமே இடம்பெற்றது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், விடுபட்ட வாக்காளர்கள் பெயர்களை சேர்க்க கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், இன்று மாநிலம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது.

அதன்படி, சென்னை மாவட்டத்தில் மொத்தம் 28,30,936 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆண்கள் 13,65,763 பேர், பெண்கள் 14,64,344 பேர், மூன்றாம் பாலினத்தவர் 829 பேர் இடம்பெற்றுள்ளனர்.

வரைவு பட்டியல் வெளியிட்ட பிறகு, 2,51,260 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

summary

Final voter list! 28.30 lakh people in Chennai!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.