FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நாங்கள் குடிமக்களா? அகதிகளா? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கேள்வி!

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ராகுல் காந்தியிடம் பேசியது குறித்து...

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை சந்தித்த ராகுல் காந்தி - எக்ஸ் - காங்கிரஸ்
பகிர்:

யமுனை நதிக்கரையோரம் சாந்தினி செளக் அருகேவுள்ள மேலா எஸ்டேட் பகுதியில் வசித்துவரும் 728 வாக்காளர்களில் 475 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்கள், தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கோரி விண்ணப்பம் அளித்துள்ளனர்.

தில்லியில் உள்ள வாக்குச்சாவடி எண் 38-ல் பதிவு செய்யப்பட்டிருந்த 729 வாக்காளர்களில் 728 வாக்காளர்கள், சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் பிறகு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Advertisement

Advertisement

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் நாட்டில் வாழ்ந்துவரும் குடிமக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதன் பிறகு, கீதா காலனி பகுதியில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில், 728 பேரில் 475 பேர் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். வாக்குச்சாவடி நிலைய அதிகாரி அப்படிவங்களை சரிபார்த்து, வாக்காளர் பட்டியலில் அவர்களை சேர்த்துள்ளனர். வீடு இல்லாத வாக்காளர்கள் என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டு, அந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலா எஸ்டேட் பகுதியில் யமுனை நதியோரம் வசித்துவரும் மக்களை ராகுல் காந்தி நேரில் சென்று சந்தித்தார். வாக்குரிமை குறித்தும் அத்தியாவசிய தேவைகள் குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடினார்.

இது தொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் காங்கிரஸ் கட்சி பதிவிட்டுள்ளதாவது:

''நாம் இந்த நாட்டின் குடிமக்களா? அகதிகளா? பேலா எஸ்டேட் பகுதியில் வசித்துவரும் சகோதர, சகோதரிகள் எழுப்பிய நேரடிக் கேள்வி இது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அப்பகுதி மக்களை நேரில் சென்று சந்தித்தார். அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார். அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

பல தலைமுறைகளாக இப்பகுதியில் வசித்து வருவதாகவும், விவசாயம், கூலி வேலைகளுக்குச் சென்றுக்கொண்டிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் ராகுல் காந்தியிடம் கூறியுள்ளனர்.

ஒவ்வொரு தேர்தலிலும் அவர்கள் வாக்களித்து வருவதாகவும் கூறினர். இது வெளிப்படையான வாக்குத் திருட்டு. கீழ் நிலை முதல் உயர் நிலை வரை இதற்கு காரணமான அனைவரும் விரைவில் வெளிப்படுவார்கள்'' எனப் பதிவிடப்பட்டுள்ளது.

summary

Are we citizens or refugees? Those removed from the electoral roll ask

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments