ஆந்திரத்தில் நீக்கப்பட்ட 46.6 லட்சம் வாக்காளர் பதிவுகளை மீண்டும் சரிபார்க்கும் தேர்தல் ஆணையம்!
ஆந்திரத்தில் நீக்கப்பட்ட 46.6 லட்சம் வாக்காளர் பதிவுகளை மீண்டும் சரிபார்க்கும் தேர்தல் ஆணையத்தைப் பற்றி...
ஆந்திரத்தில் நீக்கப்பட்ட 46.6 லட்சம் வாக்காளர்களின் பதிவுகளை தேர்தல் ஆணையம் மீண்டும் சரிபார்க்க உள்ளது.
ஆந்திரத்தில் ஜூன் 15 முதல் ஜூலை 24 வரை வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர மறுஆய்வில், 44.8 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் வரைவுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர்.
சிறப்புத் தீவிர மறுஆய்வில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவெடுத்ததாகக் கூறி, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் ஆந்திரத்தில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையில் நீக்கப்பட்ட 46.6 லட்சம் வாக்காளர்களின் பதிவுகளை மீண்டும் சரிபார்க்க உள்ளதாக தேர்தல் அதிகாரி விவேக் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரி விவேக் யாதவ் கூறுகையில், “வரைவு வாக்காளர் இறுதிப்பட்டியல் அக். 16 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. நீக்கப்பட்ட 46,62,583 வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று அந்தந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மீண்டும் சரிபார்ப்பார்கள்.
வாக்காளரின் பெயர் கவனக்குறைவாக நீக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், அவருக்குப் படிவம்-6-ஐ நிரப்பி மீண்டும் பெயரை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
The Election Commission will re-verify over 46.6 lakh deleted electors in Andhra Pradesh through a special door-to-door drive from October 8. The exercise is meant to restore any eligible voter left out before and after the final roll is published on October 16.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.