ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!
ராணிப்பேட்டையில் காணாமல் போன குழந்தை 35 நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது பற்றி...
ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை 35 நாள்களுக்குப் பிறகு ஆந்திரத்தில் மீட்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை அடுத்த லாலாபேட்டை பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த தம்பதி சேகா் (46), பிரேமா (23). பிளாஸ்டிக் பாட்டில் சேகரித்து விற்று சாலை ஓரம் வசித்து வரும் இவா்களின் ஒரு வயது பெண் குழந்தை மகேஸ்வரி கடந்த 24.09.2026 அன்று இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போய்விட்டாா்.
அதிா்ச்சியடைந்த பெற்றோா், சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், எஸ்.பி பே.சிபின் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஆந்திர பிரதேச மாநிலம் ரேணிகுண்டாவுக்கு அருகே காணாமல் போன பெண் குழந்தையை தனிப்படைக் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
மேலும், குழந்தை மீட்கப்பட்ட இடத்திலிருந்த இரண்டு இளைஞர்களைக் கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமார் 35 நாள்களுக்குப் பிறகு ஒரு வயது பெண் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மற்றும் ராணிப்பேட்டை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
One-year-old girl who went missing in Ranipet rescued in Andhra Pradesh!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.