ஆந்திரத்தில் கரையைக் கடக்கும் 'ஒர்னாப்' புயல்: சந்திரபாபு நாயுடு அவசர ஆலோசனை
'ஒர்னாப்' புயல், கரையைக் கடந்து வரும் நிலையில், ஆந்திரம் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய அவசர ஆலோசனை குறித்து...
வங்கக் கடலில் உருவான 'ஒர்னாப்' புயல், ஆந்திரத்தில் புதன்கிழமை (அக். 28) கரையைக் கடந்து வரும் நிலையில், ஆந்திரம் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
வங்கக் கடலில் உருவான 'ஒர்னாப்' புயல், ஆந்திரத்தில் புதன்கிழமை (அக். 28) கரையைக் கடந்து வருகிறது. புயல் கரையைக் கடக்கும்போது உயிா்ச் சேதங்கள் ஏற்படாமல் தடுக்க, சம்பந்தப்பட்ட அனைத்துத் துறையினரும் உஷாா்படுத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புயல் கரையைக் கடக்கும்போது, அதிகபட்சம் மணிக்கு 125 கி.மீ. முதல் 135 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும். திடீரென இந்த வேகம் 150 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆந்திரம், மேற்கு வங்கம், புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
Advertisement
Advertisement
காக்கிநாடாவில் பலத்த காற்று கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பாக வீட்டியேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
12 விமானங்கள் சேவை ரத்து
இந்த நிலையில், சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், ராஜமுந்திரி இடையே இயக்கப்படும் மற்றும் வருகை தரும் 12 இண்டிகோ விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் அவசர ஆலோசனை
இதனிடையே, ஒர்னாப் புயலின் தாக்கம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆந்திரம் முதல்வர் சந்திரபாபு நாயுடு புதன்கிழமை தொலைபேசி மூலம் அவசர ஆலோசனை மேற்காண்டாா்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலையில் முறிந்து விழுந்த மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதுடன், நிவாரண முகாம்களில் உணவு, குடிநீா், இதர அத்தியாவசிய வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.வானிலை சீரடைந்ததும் மின் இணைப்பை மீட்டெடுக்கவும், கட்டுப்பாட்டு அறைகளில் இருந்தபடி தொடா் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என அதிகாரிகளுக்கு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஆயத்தப் பணிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த முதல்வர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்று கேட்டார். இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பலத்த காற்று தொடர்ந்தாலும், சில மாவட்டங்களில் மழைப்பொழிவு குறைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர்.
Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu has placed officials on high alert following Cyclone Arnab
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.