FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

எஸ்ஐஆர்! நீக்கப்பட்ட வாக்காளர்களை சேர்க்க... சிறப்பு முகாம்கள்- தேர்தல் ஆணையம் உத்தரவு!!

எஸ்ஐஆர் நடைமுறையில் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்துமாறு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் ஆணையம் - கோப்புப் படம்
பகிர்:

எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடைமுறை அமல்படுத்தப்பட்ட மாநிலங்களில், நீக்கப்பட்ட வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை சேர்க்க சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டு ஏராளமான வாக்காளர்கள் எழுத்துப் பிழை போன்ற சிறியத காரணங்களுக்காக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

எஸ்ஐஆர் நடைமுறை குறித்து பேச்சு தொடங்கிய போதே, திமுக உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் அதனை எதிர்த்து வந்த நிலையில், தேர்தல் ஆணையர்களே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக எஸ்ஐஆர் நடைமுறையை தொடங்கியது அண்மையில் ஆங்கில ஊடகம் வெளியிட்ட தகவல் மூலம் வெளியானது.

Advertisement

Advertisement

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நிலையிலும், தகுதியான வாக்காளர்கள் பலர் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்தும் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம், மாநில தலைமைத் தேர்தல் அலுவலர்களுடனான இணையவழி சந்திப்பின்போது, எஸ்ஐஆர் நடந்து முடிந்த மாநிலங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி, வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாய்மொழியாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எஸ்ஐஆர் பணியின்போது நீக்கப்பட்டவர்களையும், புதிதாக சேர்க்க வேண்டியவர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டு, விடுபட்டவர்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் விவரங்களை அறியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments