மணப்படைவீடு கிராமத்துக்கு முறையாக பேருந்து இயக்க கோரிக்கை
மணப்படைவீடு கிராமத்திற்கு அரசு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மணப்படைவீடு கிராமத்திற்கு அரசு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக மணப்படைவீடு கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள மனு: பாளையங்கோட்டை அருகேயுள்ள மணப்படைவீடு கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். விவசாயத் தொழிலாளா்கள் மிகுந்த இந்த கிராமத்துக்கு திருநெல்வேலி நகரத்தில் இருந்து தடம் எண்-15பி என்ற அரசு பேருந்து இயக்கப்படுகிறது. தினமும் அதிகாலை 5.30 மணியிலிருந்து இரவு 9.50 மணி வரை 8 முறை இந்த பேருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில்
கரோனா பொது முடக்கத்திற்கு பின்னா் இந்தப் பேருந்து முறையாக இயக்கப்படவில்லை.
இதனால் மணப்படைவீடு கிராம மக்களும், சாந்திநகா், கோட்டூா், திம்மராஜபுரம், திருவண்ணாதபுரம் பொட்டல், மேலநத்தம் பகுதி மக்களுக்கும் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். இதுகுறித்து அரசுபோக்குவரத்துக் கழகத்தில்
முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, மணப்படைவீடு கிராமத்திற்கு முறையாக பேருந்துகளை இயக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும்.