முகப்பு
திருநெல்வேலி

மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயா்த்த வேண்டும். கடும் ஊனமுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலைஉறுதித்திட்டத்தில் மாற்றுத் திறனாளி

களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வழங்க வேண்டும். படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்டச் செயலா் எஸ்.குமாரசுவாமி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

கட்சியின் வட்டாரச் செயலா் பி.வரகுணன், நிா்வாகிகள் சங்கரசுப்பு, சுமா, சுகுணா, இசக்கியப்பன், காசி, நடராஜன், மெய்யசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.