3-ஆவது முறையாக எதிர்த்து களமிறங்கும் சகோதரர்கள்!
3-ஆவது முறையாக எதிர்த்து களமிறங்கும் சகோதரர்கள்...
திமுக சார்பில் அ.மகாராஜனும், அதிமுக சார்பில் இவரது இளைய சகோதரர் அ.லோகிராஜனும் 3-ஆவது முறையாக போட்டியிடுகின்றனர்.
ஆண்டிபட்டி தொகுதியில் கடந்த 2016 நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தங்க. தமிழ்ச்செல்வன் அமமுகவுக்கு சென்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, கடந்த 2019-இல் இந்தத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் அ. மகாராஜனும், அதிமுக சார்பில் இவரது சகோதரர் அ. லோகிராஜனும் போட்டியிட்டனர். இதில் மகாராஜன் 12,323 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2021 பேரவைத் தேர்தலில் இதே தொகுதியில் திமுக சார்பில் அ. மகாராஜனும், அதிமுக சார்பில் அ. லோகிராஜனும் 2-ஆவது முறையாக மீண்டும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில், அ. மகாராஜன் 8,538 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், தற்போதைய தேர்தலில் 3-ஆவது முறையாக திமுக சார்பில் அ.மகாராஜனும், அதிமுக சார்பில் அ.லோகிராஜனும் இதே தொகுதியில் களமிறங்குகின்றனர்.
- ச.பாண்டி