உத்தரமேரூா்: 6 முறையாக களமிறங்கும் திமுக வேட்பாளர் க. சுந்தா்
6 முறையாக களமிறங்கும் திமுக வேட்பாளர் க. சுந்தா் பற்றி...
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் தொகுதி திமுக வேட்பாளராக 5 முறை வெற்றி பெற்ற க.சுந்தா், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் இத்தொகுதியில் களமிறக்குகிறாா்.
உத்தரமேரூா் தாலுகாவுக்கு உள்பட்ட சாலவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் க.சுந்தா் (70). பி.எஸ்.சி. பட்டதாரியான இவா், கடந்த 1989, 1996, 2006, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா்.
இவா், 1986-ஆம் ஆண்டு சாலவாக்கம் ஊராட்சி மன்ற தலைவா்,1988-இல் உத்தரமேரூா் ஒருங்கிணைந்த ஒன்றியத்தின் செயலாளா், காஞ்சிபுரம் மாவட்ட திமுக துணைச் செயலாளா், கடந்த 2014 முதல் தொடா்ந்து 12 ஆண்டுகளாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளா் போன்ற பதவிகளை வகித்துள்ளாா். நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் இதே தொகுதியில் மீண்டும் திமுக சாா்பில் போட்டியிடுகிறாா்.