முகப்பு
தமிழ்நாடு

திமுகவில் 60 தொகுதிகளில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு: 17 பேர் பொறியியல் பட்டதாரிகள்!

திமுகவில் 60 புதுமுகங்களுக்கும் 17 பொறியியல் பட்டதாரிகளுக்கும் வேட்பாளர் வாய்ப்பு!

Updated On : 28 மார்ச், 2026 at 1:43 PM
- Center-Center-Coimbatore
பகிர்:

திமுக சார்பில் வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பட்டதாரிகளுக்கு, அதிலும் குறிப்பாக, பொறியியல் தொழில்நுட்பம் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வரும் பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 28) வெளியிட்டார். திமுக வேட்பாளர்களில் 125 பேர் பட்டம் பெற்றவர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 164 வேட்பாளர்களில் 17-க்கும் மேற்பட்டோர் பொறியியல் (பி.இ., எம்.இ., பி.டெக்., எம்.டெக்.) தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் பட்டம் பெற்றவர்களாவர்.

  • திருவள்ளூர் - வி. ஜி. ராஜேந்திரன்

  • வில்லிவாக்கம் - கார்த்திக் மோகன்

  • ஆற்காடு - ஜெ. எல். ஈஸ்வரப்பன்

  • வானூர் - கௌதம் திராவிடமணி

  • உளுந்தூர்பேட்டை - ஜி. அர். வசந்தவேல்

  • கெங்கவல்லி - கு. சின்னதுரை

  • மேட்டூர் - முதுன் சக்ரவர்த்தி

  • அரவக்குறிச்சி - மொஞ்சனூர் ஆர். இளங்கோ

  • மண்ணச்சநல்லூர் - சீ. கதிரவன்

  • குன்னம் - சா. சி. சிவசங்கர்

  • நெய்வேலி - சபா. ராஜேந்திரன்

  • புவனகிரி - துரை கி. சரவணன்

  • மதுரை (மத்திய) - பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன்

  • திருப்பரங்குன்றம் - கிருத்திகா தங்கபாண்டி

  • திருச்சுழி - தங்கம் தென்னரசு

  • திருநெல்வேலி - சு. சுப்பிரமணியன்

  • விருகம்பாக்கம் - பிரபாகர்ராஜா

  • கோயமுத்தூர் வடக்கு - செந்தமிழ்செல்வன்

  • முசிறி - என். எஸ். கருணைராஜா

அதேபோல மொத்த வேட்பாளர்களில் 60 பேர் புதுமுகங்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழக சட்டப்பேரவைக்குள் முதல்முறை உறுப்பினர்களாகும் வாய்ப்பு கிடைக்குமா என்பது வாக்கு எண்ணிக்கை நாளான மே. 4-இல் தெரிய வரும்.

summary

DMK candidates list includes 17 Engineering Graduates and over 60 new candidates

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.