முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியைக் கைப்பற்ற தீவிரம் காட்டும் திமுக

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிட வேண்டும் என கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்...

Updated On : 23 மார்ச், 2026 at 10:28 PM
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் - (கோப்புப் படம்)
பகிர்:

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிட வேண்டும் என கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதை ஒவ்வொரு கட்சிக் கூட்டத்திலும் திமுக நிர்வாகிகள் கனிமொழி எம்.பி., வடக்குமாவட்டச் செயலரும் அமைச்சருமான பி.கீதா ஜீவன் உள்ளிட்ட தலைவர்களிடம் எடுத்துக்கூறி வருகின்றனர்.

மேலும், கடந்தாண்டு கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி, வரும் தேர்தலில் கோவில்பட்டியில் திமுக போட்டியிடும் என்றார்.

இந்த தொகுதியில் திமுக சார்பில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட கழுகுமலை ஏ. சுப்பிரமணியன் 428 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

அப்போது, மக்கள் நலக் கூட்டணி தனியாக களம் கண்ட நிலையில், மதிமுக சார்பில் போட்டியிட்ட விநாயகா ஜி.ரமேஷ் 28,512 வாக்குகள் பெற்றார்.

திமுக சார்பில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட 24 பேர் விருப்ப மனு அளித்திருந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற வேட்பாளர் நேர்காணலில் 23 பேர் பங்கேற்றனர்.

கோவில்பட்டி தொகுதியில் முக்குலத்தோர், நாயக்கர் பட்டியலினத்தவர், நாடார், வேளாளர் சமூகத்தினர் கணிசமான எண்ணிக்கையிலும், இதர சமூகத்தினர் பரவலாகவும் உள்ளனர்.

இந்நிலையில், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த 8 பேர் விருப்ப மனு அளித்திருப்பதாக கட்சியினர் தெரிவித்தனர். கோவில்பட்டி தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்காமல், திமுக வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்பதே நிர்வாகிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும், திமுக நிர்வாகிகள் மற்றும் மகளிர் ஸ்டாலின் படையினர் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.